search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    வில்வத்தால் சிவனை அர்ச்சிக்க கங்கையின் புனிதத்தை பெறலாம்
    X

    வில்வத்தால் சிவனை அர்ச்சிக்க கங்கையின் புனிதத்தை பெறலாம்

    • எப்பொருளில் லிங்கம் செய்தாலும் பூஜைக்கு உகந்ததாகும் என விஷ்ணு தர்மோத்தரம் சொல்கிறது.
    • சின்ன பூஜையால் மன திருப்தி அடைந்து பேரருள் தருபவர் ஈசன்

    எப்பொருளில் லிங்கம் செய்தாலும் பூஜைக்கு உகந்ததாகும் என விஷ்ணு தர்மோத்தரம் சொல்கிறது.

    பிருத்வி எனப்படும் மண்ணால் செய்த சிவலிங்கம் செய்து ஓராண்டு காலம் சிவமூலத்தால் வில்வம் கொண்டு வந்து வழிபடுபவன், நீண்ட ஆயுள், பலம், செல்வம், செல்வாக்கு பெறுவான், நன் மக்கட் பேறுடன் சுகமாக வாழ்வான், கோருகின்ற வரங்களும் பெறுவான் என்கிறது தைத்தரிய கோசம் என்ற நூல்.

    சின்ன பூஜையால் மன திருப்தி அடைந்து பேரருள் தருபவர் ஈசன் என்பதால் வேத நூல்கள் இவரை "ஆக தோஷி" என்று போற்று கின்றன.

    மகா சிவராத்திரி நாளில் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு பகலில் கனி, கிழங்கு, பால் உண்டு இரவில் கண் விழித்து சுத்த உபவாசம் கடைப்பிடித்து நான்கு காலம் சிவாலய தரிசனம் செய்து சிவபுராணம், பஞ்சபுராணம் படித்து சிவதாம் ஜெபம் செய்து, சிவலிங்க திருமேனியை வில்வதளங்களால் அர்ச்சனை செய்து முறையாக பக்தியுடன் வழிபடல் வேண்டும்.

    சிவபெருமானை பூஜையால் தான் மகிழச் செய்ய முடியும். பெருமானை விரதம் செய்து தான் மகிழ்ச்சிப்படுத்த முடியும் என்று பல தீபிகா நூல் உரைத்துள்ளது.

    பத்தாயிரம் ஆண்டுகள் ஆசார நியமத்துடன் கங்கையில் குளித்த தூய்மையை வில்வதளத்தால் சிவனை அர்ச்சனை செய்து பெறலாம் என்பது சிவபுராணத்தின் கூற்று.

    Next Story
    ×