காமன்வெல்த்-2022

சாக்சி மாலிக்,  பூஜா சிகாக்

காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு

Published On 2022-08-08 21:30 GMT   |   Update On 2022-08-08 21:30 GMT
  • நாட்டுக்காக பதக்கம் வெல்வது என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை.
  • அனைத்து ஆதரவையும் அளித்த இந்தியாவுக்கு பெருமை சேர்க்க விரும்புகிறேன்.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்ற 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி நிறைவடைந்த நிலையில், இந்தியா மொத்தமாக 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனைகள் மகிழ்ச்சியுடன் நாடு திரும்பினர். டெல்லி விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் திரண்ட ஏராளமானோர் இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

எனக்கு அனைத்து ஆதரவையும் அன்பையும் அளித்த இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றதற்கு பெருமைப்படுகிறேன் என்று இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தெரிவித்தார். வரவேற்பு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது ஒரு சிறந்த உணர்வு மற்றும் ஒலிம்பிக்கிற்குப் பிறகு இது எனது முதல் பெரிய பதக்கம் என்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என அவர் தெரிவித்தார்.

நாட்டுக்காக பதக்கம் வெல்வது என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை என்று மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை பூஜா கெலாட் குறிப்பிட்டார்.

Tags:    

Similar News