3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி: தொடரையும் கைப்பற்றியது
- சஞ்சு சாம்சன் சதத்தால் இந்தியா 296 ரன்கள் குவித்தது.
- அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட் சாய்க்க தென்ஆப்பிரிக்கா 218 ரன்னில் சுருண்டது.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்தன.
இந்த நிலையில் நேற்று 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 296 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 108 ரன்களும், திலக் வர்மா 52 ரன்களும், ரிங்கு சிங் 38 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் 297 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. ஹென்ரிக்ஸ்- ஜோர்ஜி ஜோடி நல்ல தொடக்க கொடுத்தது. ஹென்ரிக்ஸ் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.
ஜோர்ஜி 81 ரன்னில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்காவின் தோல்வி உறுதியானது. தென்ஆப்பிரிக்கா 45.5 ஓவரில் 218 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியா 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டும் வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீ்ழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 எனக் கைப்பற்றியுள்ளது.