வழிபாடு
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில்மீண்டும் தங்கத்தேர் உலா 24-ந்தேதி நடக்கிறது
- திண்டுக்கல்லில் உள்ளது பிரசித்திபெற்ற கோட்டை மாரியம்மன் கோவில்.
- திருவிழா முடிவடைந்ததையடுத்து கோவிலில் மீண்டும் தங்கத்தேர் உலா நடைபெற உள்ளது.
திண்டுக்கல்லில் உள்ள பிரசித்திபெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசித்திருவிழா தொடங்குவதற்கு முன்பு அம்மனின் தங்கத்தேர் உலா நிறுத்தி வைக்கப்படுவதும், அதன்பிறகு திருவிழா நிறைவு பெற்றதும் மீண்டும் அம்மன் தங்கத்தேர் உலா தொடங்குவதும் வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு மாசித்திருவிழா தொடங்குவதற்கு முன்பு அம்மனின் தங்கத்தேர் உலா நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் தற்போது திருவிழா முடிவடைந்ததையடுத்து கோவிலில் மீண்டும் தங்கத்தேர் உலா நடைபெற உள்ளது.
அந்த வகையில் வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணியளவில் தங்கத்தேர் உலா நடக்கிறது. இந்த தகவலை கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.