உள்ளூர் செய்திகள்
வள்ளியூர் அருகே 12 அடி நீள மலைப்பாம்பு மீட்பு
- சுமார் 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை அலெக்ஸ் செல்வன் லாவகமாக பிடித்தார்.
- பிடிபட்ட பாம்பு திருக்குறுங்குடி அடர் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.
வள்ளியூர்:
வள்ளியூரில் இருந்து ஏர்வாடி செல்லும் சாலையில் ஒரு மலைப்பாம்பு கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் பாம்புகள் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு சென்ற பேரிடர் மேலாண்மை பாம்புகள் மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் அலெக்ஸ் செல்வன் சுமார் 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை லாவகமாக பிடித்தார். தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களிடம் பாம்பு ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் வனஅதிகாரி யோகேஸ்வரன் தலைமையிலான வனகாவலர்கள் செல்வமணி, அண்ணாதுரை ஆகியோர் பிடிபட்ட பாம்பை திருக்குறுங்குடி அடர் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனர். அப்போது ரெட் கிராஸ் தன்னார்வலர்கள் ஆல்வின் சேவியர், ஷேக், ஆப்தமிரா சேம் சகாப்தின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.