உள்ளூர் செய்திகள்
மத்திய பிரதேசத்தில் இருந்து தஞ்சைக்கு சரக்கு ரெயிலில் வந்த 2600 டன் கோதுமை
- மத்திய பிரதேசத்தில் இருந்து தஞ்சைக்கு சரக்கு ரெயிலில் 2600 டன் கோதுமை வந்தது.
- கோதுமை மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு மத்திய சேமிப்பு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்டன.
தஞ்சாவூர்:
தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மத்திய தொகுப்பிலிருந்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. வெளி மாநிலங்களில் வரும் கோதுமை உள்ளிட்ட பொருட்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில்களில் அனுப்பி வைக்கப்படுகிறது.
அதன்படி இன்று மத்திய பிரதேசத்தில் இருந்து 2600 டன் கோதுமை சரக்கு ரெயிலின் 42 வேகன்களில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் கோதுமை மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு மத்திய சேமிப்பு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்டன. அங்கிருந்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு கோதுமை விநியோகிக்கப்பட உள்ளது.