தாட்கோ மூலம் மானியம் பெற ஆதிதிராவிடர் - பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்
- விண்ணப்பதாரர் மற்றும் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின்கீழ் இதுவரை மானியம் ஏதும் பெற்றிருக்க கூடாது.
- விண்ணப்பதாரர் மற்றும் வணிகத்தை தொடர்வதற்கு முன் விண்ணப்பதாரர் நிறுவனத்திலிருந்து உணவு உரிமத்தை பெற வேண்டும்.
கடலூர்:
தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் தொழில் முனைவோர் திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ஆவின் பாலகம் அமைக்க மின் வாகனம் , குளிர்விப்பான் மற்றும் உறைவிப்பான் கொள்முதல் தாட்கோ மானியம் ரூ.90 ஆயிரம் மானியத்துடன் திட்டம் செயல்படுத்த அரசாணையிடப்பட்டுள்ளது. இதில் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். 18 முதல் 65 வயதிற்குள்ளவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மற்றும் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின்கீழ் இதுவரை மானியம் ஏதும் பெற்றிருக்க கூடாது. கூடுதல் செலவினத்தை ஈடு செய்யவும் மற்றும் அதிக பட்ச மானியத் தொகை சென்றடைய ஆதிதிராவிட தனிநபர்களுக்கான திட்டத் தொகையில் 30 சதவீதம் விழுக்காடு அல்லது அதிகபட்சமாக 2.25 இலட்சம் மானியம் விடுவிக்கப்படும்.
ஆவின் பாலகம் அமைக்க தேர்ந்தெடுக்கப்படும் கடையின் இடம் குறைந்த பட்சம் 100 சதுர அடியாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் அருகில் உள்ள மண்டல அலுவலகத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பித்தவுடன் அந்தந்த மண்டல அலுவலகத்தின் பொது மேலாளர் மற்றும் துணை பொது மேலாளர் கடையை மதிப்பீடு செய்து ஒதுக்கீட்டு உத்தரவை வழங்குவார்கள். விண்ணப்பதாரர் மற்றும் வணிகத்தை தொடர்வதற்கு முன் விண்ணப்பதாரர் நிறுவனத்திலிருந்து உணவு உரிமத்தை பெற வேண்டும். ஆவின் பொருட்கள் ஆவின் மூலம் விற்பனை நிலையத்திற்கே நேரடியாக சென்று விநியோகம் செய்யப்படும். அதற்கான பணத்தை உடனடியாக செலுத்த வேண்டும். இத்திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்திக தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என கலெக்டர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.