கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
- கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது
- எதிர்பாராத விதமாக 5 அடி ஆழமுள்ள உரை கிணற்றுக்குள் பசுமாடு தவறி விழுந்தது.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் தா.பழூர் வக்கார மாரி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி மஞ்சுளா. இவருக்கு சொந்தமான பசு மாட்டை அதே பகுதியில் உள்ள அசோகன் என்பவருடைய வயலில் உள்ள தரிசு பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த 15 அடி ஆழமுள்ள உரை கிணற்றுக்குள் பசுமாடு தவறி விழுந்தது. இதனை பார்த்த மஞ்சுளா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜெயங்கொண்டம் தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி மாட்டை கயிற்றால் பிணைத்து 2 மணி நேர போராட்டத்திற்கு பின் பசு மாட்டினை மேலே கொண்டு வந்தனர். இதையடுத்து பசுமாட்டை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்களை அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் வெகுவாக பாராட்டினர்.