படைவெட்டி மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
- மாரியம்மனுக்கு 1,008 இளநீர் அபிஷேகம் நடந்தது.
- அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை சேந்தங்குடியில் படைவெட்டி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிக் கடை ஞாயிற்று கிழமையை முன்னிட்டு பால் குடம் விழா நடைபெற்றது. கருவரையில் உள்ள மாரி யம்மன் திருவுருவத்துக்கு 1008 இளநீர் அபிஷேகம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து காவிரி கரையில் இருந்து ஊர்வலமாக பச்சைக்காளி பவளக்காளி ஆட்டத்துடன் அம்பாள் விதி உலாவும், பெண்கள் பால்குடம் தலையில் சுமந்துக் கொன்டு அம்மன் சன்னதிக்கு வந்து தங்களது நேர்த்ததிக் கடனை செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு மகா அபிஷேகமும், அலங்கார அர்ச்சனை செய்து தீபாரத னையும் நடைபெற்றது.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்க ப்பட்டது.மாலை சந்தன காப்பு அலங்காரம் செய்து ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற் பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா ராஜேந்திரன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தார்கள். விழாவில் நகர்மன்ற துணைத் தலைவர் சிவக்குமார், சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் தொழிலதிபர்ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் மோகன், ஆன்மீகத் தொண்டர் எஸ். குருமூர்த்தி, சாமி, செல்வம், ரவி உட்பட பலர் கலந்துக்கொன்டு சாமி தரிசனம் செய்தனர்.