தூய்மை சேவா இயக்கத்தின் சார்பில் தூய்மை பணிகள்
- நாட்டு நலப்பணித் திட்ட இயக்கம் மாணவர்களுடன் ஒன்றிணைந்து தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
- நகர்மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு தலைமையில் நடை பெற்றது
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளிலும் மத்திய அரசின் தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் நகரில் ஒட்டுமொத்தமாக தூய்மை பணி நடைபெற்றது. 18-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் புதிய பஸ் நிலையம், அம்பேத்கார் சிலை, அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மற்றும்
எல்.எம்.சி. மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட இயக்கம் மாணவர்களுடன் ஒன்றிணைந்து தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன்,துணை தலைவர் சுப்பராயன் ஆகியோர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர் இதே போல் 13-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நகர் மன்ற உறுப்பினர் முபாரக் தலைமையில் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து தூய்மை சேவா இயக்கத்தின் படி தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது இதில் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பொறுப்பா ளர்கள் பலர் பங்கேற்றனர். 14-வது வார்டு பிடாரி வடக்கு வீதி உள்ளிட்ட பகுதிகளில் நகர்மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு தலைமையில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் தூய்மை பணியில் ஈடுபட்டு குப்பைகளை அகற்றினர்.