உள்ளூர் செய்திகள்

வெள்ளாடு, செம்மறி ஆடுகளில் குடற்புழுநீக்கம் செயல்விளக்கம்

Published On 2023-08-24 09:06 GMT   |   Update On 2023-08-24 09:06 GMT
  • ஐமீன்சிங்கம்பட்டி கிராமத்தில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளில் குடற்புழுநீக்கம் செயல்விளக்கம் செய்து காட்டபட்டது.
  • ஆடுகளுக்கு சாண பரிசோதனை செய்து உருளை புழுக்களின் தாக்கம் அதிகமாக இருந்தால் குடற்புழு நீக்கம் செய்யலாம்.

அம்பை:

அம்பாசமுத்திரம் வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத்திட்டத்தின் (சீப்பர்ஸ்) கீழ் ஐமீன்சிங்கம்பட்டி கிராமத்தில் அம்பாசமுத்திர வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கற்பகராஜ்குமார் வழிகாட்டுதலின்படி, விவசாயி ராக்சமுத்து ஆட்டுகொட்டகையில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளில் குடற்புழுநீக்கம் செயல்விளக்கம் செய்து காட்டபட்டது.

சிங்கம்பட்டி உதவி கால்நடை மருத்துவர் தேவிகா பேசுகையில், மழைக்காலங்களில் ஆடுகளில் குடற்புழுக்கள் மற்றும் உண்ணிகளால் ஏற்படும் பொருளாதார இழப்பை தடுக்க குடற்புழு மற்றும் உண்ணி நீக்கம் செய்ய வேண்டும்.

ஆடுகளுக்கு சாண பரிசோதனை செய்து உருளை புழுக்களின் தாக்கம் அதிகமாக இருந்தால் குடற்புழு நீக்கம் செய்யலாம். ஆடுகளுக்கு மருந்துக் குளியல் அளிக்கும் அன்று இருமடங்கு அடர்த்தியுள்ள உண்ணி நீக்க மருந்தை ஆடுகள் அடைக்கும் கொட்டகைகளின் உட்புற சுவர் மற்றும் சுற்றுபுறத்தின் தரைகளிலும் தெளித்து அங்குள்ள உண்ணிகளை ஒழித்தால் உண்ணிகளின் தாக்குதலை தவர்க்கலாம் என்றார். விவசாயி ராக்சமுத்துவிற்கு வயலில் உண்ணி மற்றும் குடற்புழு நீக்க மருந்துகள் மூலம் ஆடுகளுக்கு செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது.

இதற்கான ஏற்படுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஈழவேணி, உதவி வேளாண்மை அலுவலர் விஜயலெட்சுமி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் தங்கசரவணன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News