உள்ளூர் செய்திகள்

தருமபுர ஆதீனம் வெளியிட்ட நூலை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் பெற்றுக்கொண்டார்.

ஆன்மிக நூலை வெளியிட்ட தருமபுர ஆதீனம்

Published On 2023-05-22 10:03 GMT   |   Update On 2023-05-22 10:03 GMT
  • ஆபதுதாரணர் மாலை என்ற ஆன்மீக நூலை தருமபுர ஆதீனம் வெளியிட்டார்.
  • தொடர்ந்து, தருமபுரம் ஆதீனம் நூலின் விபரங்கள் குறித்து கூறினார்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது.

இக்கோயிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.

பிரசித்தி பெற்ற இக்கோயில் கும்பாபிஷேகம் வரும் 24ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதனிடையே உயர்நீதிமன்ற நீதியரசர் மகாதேவன் சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயி லுக்கு வருகை புரிந்தார்.

தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சா ரியார் சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.

தொடர்ந்து மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை சார்பில் அச்சிடப்பட்ட ஆபதுதாரணர் மாலை என்ற ஆன்மீக நூலை தருமபுரம் ஆதீனம் வெளியிட அதனை நீதிபதி மகாதேவன் பெற்றுக் கொண்டார்.ஆன்மீகப் பேரவை நிறுவனர் இராம.சேயோன் உடன் இருந்தார்.

தொடர்ந்து கோயிலுக்கு சென்ற நிதியரசர் மகாதேவன் சுவாமி, அம்பாள், பைரவர் ஆகிய சுவாமி சன்னதிகளில் தரிசனம் செய்தார்.

அப்போது கோயில் நந்தவனத்தில் கடந்த மாதம் யாகசாலை பூஜைக்காக பள்ளம் வெட்டிய போது கிடைத்த சாமி சிலைகள், தேவாரப் பதிகம் தாங்கி செப்பேடுகள் கோயில் பாது காப்பு அறையில் வைத்து பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

அதனை நிதிபதி மகா தேவன் பார்வையிட்டார்.

அவருக்கு தருமபுரம் ஆதீனம் அதன் விவரங்கள் குறித்து கூறினார்.

Tags:    

Similar News