இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்
- மழலையர் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் ஆடை அலங்கார அணிவகுப்பினை நடத்தினர்.
- 6, 7-ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் குழு நடனமும் அரங்கேற்றப்பட்டது.
தென்காசி:
இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டப்பட்டது. மாணவி ஹர்ஷிதா ஸ்ரீ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவி ஆஹிலா வரவேற்று பேசினார். இதில் மழலையர் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் குழுவாக இணைந்து உபயோகமற்ற காகிதங்களை மறுசுழற்சி செய்யும் விதமாக பாரம்பரிய ஆடைகளை அணிந்து ஆடை அலங்கார அணிவகுப்பினை நடத்தினர். மாணவி காளிபிரியா பரதநாட்டியம் ஆடினார். 6, 7-ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் குழு நடனமும் அரங்கேற்றப்பட்டது.
9-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் குழுவாக இணைந்து கிருஷ்ண பெருமான், பூமாதேவியர் நரகாசுரனை வதம் செய்த நிகழ்ச்சியை நாடகமாக நடித்து காட்டினர். சுற்றுச்சூழல் மாசு இல்லாத தீபாவளி பண்டிகை கொண்டாடும் முறையை பற்றி பிளஸ்-1 மாணவர்கள் மவுன நாடகம் நடித்து காட்டினர். முடிவில் மாணவி ஸ்ரீனிகா நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை பாரத் கல்வி குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.