உள்ளூர் செய்திகள்

முகாமில் பணி நியமன ஆணைகளை கலெக்டர் ரவிச்சந்திரன், தனுஷ்குமார்

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜா, சதன் திருமலைகுமார் ஆகியோர் வழங்கினர்.

சங்கரன்கோவிலில் வேலை வாய்ப்பு முகாம்

Published On 2023-09-03 08:50 GMT   |   Update On 2023-09-03 08:50 GMT
  • கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
  • முகாமில் மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை பெற்றனர்.

சங்கரன்கோவில்:

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை யினர் ஆகியோர் இணைந்து சங்கரன்கோவில் ராஜபாளையம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தியது.

முகாமிற்கு தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி., தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செய லாளர் ராஜா எம்.எல்.ஏ., டாக்டர் சதன் திருமலைக்கு மார் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் பத்மா வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகவராவ் திட்ட விளக்க உரையாற்றினார். நெல்லை வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குனர் டாக்டர் சண்முகசுந்தரம் வரவேற்றார். இதில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதி உடைய நபர்களை நேர்காணல் செய்து பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

இதில் மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை பெற்றனர். இதில் பள்ளி செயலாளர் டாக்டர் சுப்பாராஜ், பள்ளி முதல்வர் சுருளிநாதன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரம்யா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், தனியார் நிறுவ னங்களின் அதிகாரி கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News