மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தந்தை, மகள் பலி
- மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி அங்கு இருந்த மரத்தில் மோதியது
- விபத்தில் மனைவி நிர்மலா கண் எதிரே கணவர் கந்தசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் முதலியார் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கந்தசாமி (50) விசைத்தறி உரிமையாளர். இவரது மனைவி நிர்மலா, இவர்களுக்கு சிவ நந்தினி (17), என்ற மகளும், அனிருத் (15) என்ற மகனும் உள்ளனர். சிவ நந்தினி குமாரபாளையம் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 பொதுத் தேர்வை எழுதியுள்ளார்.
இந்த நிலையில் சிவ நந்தினிக்கு சத்திய மங்கல த்தில் உள்ள ஒரு கல்லூரியில் சீட் வாங்குவதற்காக கந்தசாமி, அவரது மனைவி நிர்மலா, மகள் சிவநந்தினி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு அங்கிருந்து அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து அவர்கள் குமாரபாளை யத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.
மோட்டார் சைக்கிள் பவானி அந்தியூர் மெயின் ரோடு காடையா ம்பட்டி ஏரி அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி அங்கு இருந்த மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மனைவி நிர்மலா கண் எதிரே கணவர் கந்தசாமி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். மேலும் சிவநந்தினி மற்றும் நிர்மலா ஆகியோர் படு காயம் அடைந்தனர்.
அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தி னர் மீட்டு ஆம்புலன்சு மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பவானி அரசு மருத்துவ மனை யில் முதல் சிகிச்சை மேற்கொண்ட பிறகு மேல் சிகிச்சைக்காக ஈரோடு கொண்டு செல்லும் வழியில் மகள் சிவ நந்தினி இறந்தார்.
நிர்மலா ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் இறந்த கந்தசாமி மற்றும் அவரது மகள் சிவ நந்தினி ஆகியோரின் உடல் பவானி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இது குறித்து பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.