பரமத்திவேலூர் மகா மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா
- தேர் திருவிழா கடந்த 19-ந் தேதி இரவு கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.
- அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்கா ரமும், மகா தீபாராதனையும் நடைபெற்று வருகிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 19-ந் தேதி இரவு கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராத னைகளும், சிறப்பு அலங்கா ரமும், மகா தீபாராதனையும் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடை பெற்றது.
இதில் பரமத்திவேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதி களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பல்வேறு வகையான பூக்களை சூட்டி வழிபட்டனர்.முன்னதாக அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்கள் அலங்கா ரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. பக்தர்க ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.