- ஆலங்குளம் அருகே உள்ள ஆ.மருதப்பபுரம் கிராமத்தில் அதிக அளவில் கஞ்சா நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- ஆ.மருதப்பபுரம் வடக்கு தெருவை சேர்ந்த செல்வராஜ் என்பவர் தனது வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து அவற்றை வாலிபர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள ஆ.மருதப்பபுரம் கிராமத்தில் அதிக அளவில் கஞ்சா நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மகேஷ் குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சந்தேகப்படும்படியான இடங்களில் சோதனை செய்தனர்.
அப்போது ஆ.மருதப்பபுரம் வடக்கு தெருவை சேர்ந்த செல்லத்துரை மகன் செல்வராஜ்(வயது 34) என்பவர் தனது வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து அவற்றை வாலிபர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரது வீட்டில் இருந்த சுமார் 1 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். மேலும் செல்வராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட செல்வராஜ் பெயர் ரவுடிகள் பட்டியலில் உள்ளது. இவர் மீது கொலை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.