புனித அந்தோனியார் ஆலயத்தில் பெரிய தேர்பவனி
- ஆண்டு பெருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- மாதா மற்றும் அந்தோனியார் சொரூபம் தேரில் ஏற்றப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்குப்பொய்கைநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள வேளாங்கண்ணி பேரா லயத்தின் உபகோவிலான பழைமை வாய்ந்த புனித அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான் அந்தோ னியாரின் பெரியதிருத்தேர் பவனி நடைபெற்றது.
இதனை முன்னிட்டு ஆலயத்தில், வேளாங்கண்ணி பேராலய பங்கு தந்தை அற்புதராஜ் தலைமையில் சிறப்புத்திருப்பலி, கூட்டுப்பாடல் பிரார்த்தனை, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து, மின் விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்ட சப்ப ரத்தில், மாதா மற்றும் அந்தோனியாரின் சொரூபம் தேரில் ஏற்றப்பட்டு,புனிதம் செய்யப்பட்டு வீதியுலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று தரிசனம் செய்த னர்.
இதனை தொடர்ந்து வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.