உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் தொடர் கரடி நடமாட்டம் பொதுமக்கள் அச்சம்

Published On 2023-02-09 09:21 GMT   |   Update On 2023-02-09 09:43 GMT
  • அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்.

அரவேணு,

நீலகிரி மாவட்டம் அரவேணுவில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலை கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தை இணைக்கிறது. இதில் தவிட்டு மேடு பெரியார் நகர் பகுதி அமைந்துள்ளது. இங்கு 50-க்கு மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த பகுதி வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ளதால் தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலை யில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. இப்பகுதியில் நள்ளிரவு நேரத்தில் கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி வருவதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மற்றும் நேற்று அதிகாலை நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறிய கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் வெகுநேரமாக சுற்றி திரிந்தது. இது ஒருவரது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி உள்ளது. தொடர் கரடி நடமாட்டத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதே பகுதியில் கடந்த சில மாதங்களில் சிறுத்தை, கரடி மற்றும் காட்டு பன்றிகள் உலா வந்துள்ளது. எனவே அப்பகுதியில் வனத்து றையினர் வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்கா ணித்து அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கவும் இங்கு சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News