உள்ளூர் செய்திகள்

நிகழ்வில் விருத்தாசலனார் உருவபடத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தஞ்சையில், விருத்தாசலனார் நினைவேந்தல் நிகழ்ச்சி

Published On 2023-11-18 10:09 GMT   |   Update On 2023-11-18 10:09 GMT
  • தாய்மொழி தமிழ் மொழியை பாதுகாப்போம் என்று உறுதியேற்கப்பட்டது.
  • முடிவில் கல்லூரி அறங்காவலர் பொறியாளர் விடுதலைவேந்தன் நன்றி கூறினார்.

தஞ்சாவூர்:

தனித்தமிழ் ஆர்வலர், தமிழாசிரியர் முதுமுனைவர் பி.விருத்தாசலனார் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று காலை தஞ்சாவூர் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி அறங்காவலர் முனைவர் இளமுருகன் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை இணை இயக்குனர் (ஓய்வு) முனைவர் குணசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார் . நாட்டார் கல்லூரி ஆட்சி குழு செயலாளர் கலியபெரு மாள், கல்லூரி முதல்வர் தமிழ்ச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக மக்கள் ஒருங்கிணைப்பு மேடை மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருணன் மதச்சார்பின்மை, சோசலிசம், குடியரசு என்ற தலைப்பிலும், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு மக்களுக்கான கல்வி என்ற தலைப்பிலும் கருத்துரையாற்றினார்கள். இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு ஆசிரியர் தகுதி தேர்வில் தமிழ் புலவர்களும் தமிழ் பண்டிதர்களும் தேர்வு எழுத அரசாணை வெளியிட வேண்டும்.

தமிழ் வழியில் படித்த வர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

தொடர்ந்து புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கூடாது, தாய் மொழி தமிழ் மொழியை பாதுகாப்போம் என்று உறுதியேற்கப்பட்டது.

நினைவேந்தல் நிகழ்ச்சியில் அனைத்து கட்சி ,இயக்க நிர்வாகிகள், தமிழ் ஆர்வலர்கள், பேரா சிரியர்கள், அலுவ லர்கள்,மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியினை பேராசிரியர்கள் பாரி, தமிழ்ச்செல்வன், மருத்துவர் தென்றல் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

முடிவில் கல்லூரி அறங்காவலர் பொறியாளர் விடுதலைவேந்தன் நன்றி கூறினார்

Tags:    

Similar News