உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுப்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள்.

திருவாரூரில், அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

Published On 2023-04-26 09:20 GMT   |   Update On 2023-04-26 09:20 GMT
  • அங்கன்வாடி மையங்களுக்கு மின் கட்டணத்தை அரசு செலுத்த வேண்டும்.
  • மகப்பேறு விடுப்பு காலத்தை பிற துறையில் வழங்குவது போல் ஒரு வருடம் வழங்க வேண்டும்.

திருவாரூர்:

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் முதற்கட்ட போராட்டமாக மாநிலம் தழுவிய தொடர் காத்திருப்பு போராட்டம் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முன்னுரிக்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தொடர் காத்திருப்பு போராட்டம் மாவட்ட தலைவர் தவமணி தலைமையில் நடைபெற்று வருகிறது.

இதில் குழந்தைகளின் நலன் கருதியும் வெயிலின் தாக்கத்தையும் தற்போது பரவிரும் காய்ச்சலையும் கருத்தில் கொண்டு கோடை விடுமுறை அளித்திட வேண்டும்.

காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் பிரதான அங்கன்வாடி மையங்களை மினி மையமாக்குவதையும் குறு மையத்தை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தையும் கைவிட வேண்டும்.

அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதிய வழங்கிட வேண்டும். குறுமைய ஊழியர்களுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி பதவி உயர்வு வழங்க வேண்டும்.

10 ஆண்டுகள் பணி முடித்து தகுதி வாய்ந்த உதவியாளர்களுக்கு உடனடியாக பதவிய உயர்வு வழங்க வேண்டும்.

பணியிட மாறுதல் வழங்க வேண்டும்.

மருத்துவ காப்பீடு தொகை மருத்துவ செலவுகளுக்கு ஏற்ப முழுமையாக வழங்கிய வேண்டும் அங்கன்வாடி மையங்களுக்கு மின் கட்டணத்தை அரசு செலுத்த வேண்டும். மகப்பேறு விடுப்பு காலத்தை பிறத் துறையில் வழங்குவது போல் ஒரு வருடம் வழங்கிட வேண்டும்.

இவைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த காத்திருப்பு போராட்டத்தில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள 300-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

மேலும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News