உள்ளூர் செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து அதிகரிப்பு

Published On 2022-12-27 15:39 IST   |   Update On 2022-12-27 15:39:00 IST
  • விற்பனை மந்தம் காரணமாக காய்கறிகள் மூட்டை மூட்டையாக தேங்கி உள்ளன.
  • சில நாட்களாகவே கோயம்பேடு மார்கெட்டில் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி கடைக்காரர்களின் வரத்து குறைந்து உள்ளது.

போரூர்:

கோயம்பேடு மார்ககெட்டுக்கு இன்று 450 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தது. தக்காளி 52 லாரிகளிலும், வெங்காயம் 40 லாரிகளிலும் வந்திருந்தன.

கடந்த சில நாட்களாகவே கோயம்பேடு மார்கெட்டில் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி கடைக்காரர்களின் வரத்து குறைந்து விற்பனை மந்தமாகவே நடைபெற்று வருகிறது.  

இதற்கிடையே வரத்து அதிகம் காரணமாக தக்காளி, கேரட், முட்டைகோஸ், முள்ளங்கி, சவ்சவ், காலி பிளவர் ஆகிய காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கேரட் ஒரு கிலோ ரூ.15-க்கு விற்கப்பட்டது. சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ100-க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ100-க்கும் விற்பனை ஆனது.

விற்பனை மந்தம் காரணமாக காய்கறிகள் மூட்டை மூட்டையாக தேங்கி உள்ளன. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, பண்டிகை மற்றும் பள்ளி, கல்லூரி விடுமுறை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வரும் பெரும்பாலான மக்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே கோயம்பேடு மார்கெட்டில் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி கடைக்காரர்களின் வரத்து குறைந்து உள்ளது.

தினமும் 7 லாரிகளில் தக்காளி, 5 லாரிகளில் முட்டைகோஸ், காலிபிளவர் விற்பனை ஆகாமல் தேங்குகிறது. வரத்து அதிகம் காரணமாக காய்கறிகள் விலை குறைந்து உள்ளன என்றனர்.

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை விபரம் வருமாறு:-

அவரைக்காய்-ரூ.50,

பீன்ஸ்-ரூ.35,

கத்தரிக்காய்-ரூ.35,

வெண்டைக்காய்-ரூ.35, கோவக்காய், பாகற்காய், பீர்க்கங்காய்-ரூ.40,

உஜாலா கத்தரிக்காய்-ரூ.35,

வரி கத்தரிக்காய்-ரூ.20,

பீட்ரூட்-ரூ.15,

முட்டை கோஸ்-ரூ.5,

முள்ளங்கி-ரூ.8,

சவ்சவ்-ரூ.7,

காலி பிளவர் ஒன்று-ரூ.15,

நூக்கல்-ரூ.20,

கோவக்காய்-ரூ.40,

பன்னீர் பாகற்காய்-ரூ.40,

சுரக்காய்-ரூ.15,

புடலங்காய்-ரூ.20.

Tags:    

Similar News