இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் கொண்டாட்டம்
- தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் போன்றவவை வழங்கப்பட்டது.
- 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் காமராஜர் வேடம் அணிந்து அணிவகுத்து சென்றனர்.
தென்காசி:
இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் காமராஜரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ் தலைமை தாங்கினார். முதல்வர் பாலசுந்தர் முன்னிலை வகித்தார். மாணவர் நரேன் வரவேற்று பேசினார். மாணவர் கோதண்டராமன் காமராஜர் பற்றிய கவிதைகளை வாசித்தார். மாணவர் தேவேஷ் காளிதாஸ் பொற்காலம் தந்த பெருந்தலைவர் காமராசர் என்ற தலைப்பில் உரையாற்றினார். கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ் பள்ளியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் கற்பலகை எழுத்துக்கள் வடிவியல் பெட்டி உபகரணங்கள் போன்றவற்றை வழங்கினார்.
நிகழ்ச்சியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மழலையர் பிரிவு மாணவர்கள் காமராஜர் போல் வேடம் அணிந்து காமராஜரை நினைவுபடுத்தும் வகையில் அணிவகுத்து சென்றனர். சிறப்பு விருந்தினராக மாணவர் ஜெயதர்சன் கலந்துகொண்டு கல்வியின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகளைப் பற்றியும் காமராஜரின் கல்விப் பணியை பற்றியும் உரையாற்றினார். முடிவில் மாணவி சைனி ப்ரீத்தி நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ் இயக்குனர் ராதாபிரியா மற்றும் முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.