பாவூர்சத்திரம் அருகே விவசாய நிலத்தில் கொட்டப்பட்ட கேரள கழிவுகள்
- கனரக லாரிகளில் கொண்டு வரப்படும் கழிவுகள் மறை முகமாக கொட்டப்பட்டு வருகின்றன.
- கழிவுகள் மீது தீ வைப்பதால் அருகில் இருக்கும் தென்னை மரங்கள் கருகி உள்ளன.
தென்காசி:
பாவூர்சத்திரம் அடுத்து உள்ள பெத்த நாடார்பட்டி கிராமத்தில் இருந்து செல்லதாயார்புரம் கிராமத்திற்கு செல்லும் சாலை ஓரம் அமைந்துள்ள விவசாய நிலங்களில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவ மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை மர்ம நபர்கள் டன் கணக்கில் கொட்டி சென்றுள்ளனர்.
விவசாயிகளுக்கு தெரியாமல் இரவில் கனரக லாரிகளில் கொண்டு வரப்படும் கழிவுகள் மறை முகமாக கொட்டப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி கழிவுகள் மீது அவ்வப்போது தீ வைத்து எரித்து விடுகின்றனர்.
இதனால் அருகில் இருக்கும் தென்னை மரங்கள் கருகி உள்ளன. பொதுமக்களுக்கும் சுவாச கோளாறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே பெத்தநாடார்பட்டி அருகே விவசாய நிலத்தின் அருகே டன் கணக்கில் கொட்டப்பட்டுள்ள கேரள கழிவுகளை உடனடியாக அகற்றவும், அதனை தமிழக பகுதியில் கொட்டி வரும் கனரக லாரி ஓட்டுனர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.