உள்ளூர் செய்திகள்
தருமபுரியில் பூவாடைக்காரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
- அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
- விழாவையொட்டி பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி நகரம், எஸ்.வி.சாலையில் அமைந்துள்ள பூவாடைக்காரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 18-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
விழாவையொட்டி கணபதி பூஜை மற்றும் வாஸ்து பூஜைகள் நடைபெற்றது. பின்னர் யாக சாலை பூஜைகளும், அம்மனுக்கு அஷ்டபந்தனம் சாற்றுதலும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று யாக சாலையில் இருந்து மேள தாளங்கள் முழங்க புனிதநீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
தொடர்ந்து பூவாடைக்காரி அம்மனுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.