உள்ளூர் செய்திகள்
திருட்டு நடந்த கடையில் பொருட்கள் சிதறி கிடக்கிறது.
டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு
- வீரசோழன் ஆற்றங்கரையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கடை உள்ளது.
- மர்ம நபர்கள் மது பாட்டில்கள் மற்றும் பணத்தை எடுத்து சென்றனர்.
நீடாமங்கலம்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோட்டம் திருவிடைமருதூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கீழ தூண்டில் விநாயகம் பேட்டை டாஸ்மாக் கடை பூட்டு உடைத்து திருட்டு நடந்துள்ளது.
இது தொடர்பாக கடை மேற்பார்வையாளர் பழனிவேல் கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவிடைமருதூர் வீரசோழன் ஆற்று கரையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இக்கடை உள்ளது. நேற்று இரவு மர்ம நபர்கள் கதவு மற்றும் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, மது பாட்டில்களையும் விற்பனையான பணத்தையும் எடுத்துச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் போலிசார் விசாரணை செய்து வருகிறார்கள்.