மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் லட்சதீபம் ஏற்றம்
விழுப்புரம்:
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொண்டா டப்பட்டது. விழாவை முன்னிட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும் சிவபெ ருமானுக்கும் பால்,தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம், இளநீர், பஞ்சா மிர்தம்,தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உட்பி ரகாரத்தில் வைக்க ப்பட்டிருந்தது.
மாலை 5 மணிக்கு அங்கிருந்த உற்சவ அம்மனை பம்பை, மேளம் முழங்க கொண்டு செல்லப்பட்டு கோவிலின் தென்மேற்கு மூலையில் அமர்த்தினர்.பின்பு திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்ட போது அந்த தீபத்தை அம்மன் தரிசனம் செய்தவுடன் அம்மனுக்கு தீபாரதனை காட்டப்பட்டு கோவிலின் உட்புறம் கொண்டு சென்றனர்.
அதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் லட்சதீபம் ஏற்றப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.