மரங்கள் தீப்பிடித்து எரிந்து நாசம்
- பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே சின்ன சோளிபாளையம் பகுதியில் உள்ள காலி நிலத்தில், பல்வேறு வகையான மரங்களும், செடி, கொடிகளும் முளைத்திருந்தது.
- திடீரென இந்த செடி, கொடிகள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள், தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே சின்ன சோளிபாளையம் பகுதியில் உள்ள காலி நிலத்தில், பல்வேறு வகையான மரங்க ளும், செடி, கொடிகளும் முளைத்திருந்தது.
கடும் வெயிலின் காரணமாக இவை காய்ந்திருந்த நிலையில், திடீரென இந்த செடி, கொடிகள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள், தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.
இதையடுத்து, வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட சின்னசோ ளிபாளையம் பகுதிக்கு விரைந்து வந்து, வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்ப டுத்தி, தீ அருகில் உள்ள பகுதிகளுக்கு பரவாமல் தடுத்தனர்.
இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. இருப்பிaனும் தோட்டத்தில் இருந்த பல்வேறு வகையான மரங்கள் எரிந்து நாசமாயின.