உள்ளூர் செய்திகள் (District)

மீனவர்கள் உண்ணாவிரதம் இருந்த காட்சி.

மரக்காணம் அருகே மீன்பிடி துறைமுக பணியை செயல்படுத்தக் கோரி மீனவர்கள் உண்ணாவிரதம்

Published On 2022-11-28 07:43 GMT   |   Update On 2022-11-28 07:43 GMT
  • மீனவர் கிராமங்களில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் உள்ளது.
  • மீன்பிடி விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்த2 மாவட்டங்களிலும் இதுவரையில் மீன்பிடி துறைமுகங்கள் இல்லை.

 விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் 19 மீனவர் கிராமங்கள் உள்ளது. இதுபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 44 மீனவர் கிராமங்கள் இருக்கின்றது .இந்த மீனவர் கிராமங்களில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் உள்ளது.

இந்த மீன்பிடி விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்த2 மாவட்டங்களிலும் இதுவரையில் மீன்பிடி துறைமுகங்கள் இல்லை.

இந்த 2 மாவட்ட மக்களின் கோரிக்ககைளை ஏற்று விழுப்புரம் மாவட்டத்தில் அழகன் குப்பம் பக்கிங்காம் கால்வாயிலும் செங்கல்பட்டு மாவட்ட மீனவர்களுக்கு ஆலம்பரா என்கிற இடத்திலும் 2 பீப்பிள் துறைமுகங்கள் அமைக்க கடந்த 2ஆண்டுக்கு முன் அரசு சார்பில் ரூபாய் 236 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு துறைமுகங்கள் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை சம்பந்தப்பட்ட ஒப்பந்த தாரர்கள் மேற்கொண்டனர்.

தற்போது இந்த பணிகள் கிடப்பில் உள்ளது. எனவே இந்த 2 மாவட்டங்களிலும் நிறுத்தப்பட்டு உள்ள துறைமுகப் பணிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி விழுப்புரம் செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இ.சி.ஆர். சாலையில் அனுமந்தையில் உண்ணாவிரத போரா ட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது

Tags:    

Similar News