உள்ளூர் செய்திகள்

இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடிய போது எடுத்தபடம்.

பாரத் மாண்டிசோரி பள்ளியில் ஓணம் கொண்டாட்டம்

Published On 2023-08-29 08:50 GMT   |   Update On 2023-08-29 08:50 GMT
  • நிகழ்ச்சியினை மாணவி ஹரிணி மலையாளத்தில் தொகுத்து வழங்கினார்.
  • ஆசிரியை ஜோஸ்பின் சினேகா ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணம் குறித்து பேசினார்.

தென்காசி:

இலஞ்சி பாரத் மாண்டி சோரி பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. கல்வி ஆலோசகர் உஷாரமேஷ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பாலசுந்தர் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியினை மாணவி ஹரிணி மலையாளத்தில் தொகுத்து வழங்க, மாணவி ஸ்வேதா அதை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளியின் கணினி அறிவியல் ஆசிரியை ஜோஸ்பின் சினேகா மற்றும் மாணவர் அத்வைத் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவி ரக்சனா வரவேற்று பேசினார்.

ஆசிரியை ஜோஸ்பின் சினேகா ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணம் குறித்தும், மாணவர் அத்வைத் ஓணம் பண்டிகையின் முக்கியத்துவம் குறித்தும் மலையாளத்தில் பேசினர். மாணவி காளிபிரியா ஓணம் குறித்த சிறப்பு பாடலுக்கு நடனமாடினார். மழலையர் பிரிவு மாணவர்கள் ஓணம் பண்டிகையினை உணர்த்தும் விதமாக பாரம்பரிய ஆடைகளை அணிந்து அணிவகுத்து நின்றனர்.

நிகழ்ச்சியில் வாமன அவதாரம் தோன்றிய வரலாறு மற்றும் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்கான காரணத்தை காட்சிப்படுத்தினர். இதில் மாணவன் பாலசேஷன் வாமனன் போலவும், சரவணராஜா மன்னன் மகாபலி சக்கரவர்த்தி போலவும் வேடமணிந்து பாடல் பாடியும், நடித்தும் காட்டினர். மாணவன் அதீப் வாமன அவதார காட்சியை பற்றி விவரித்து கூறினார்.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மஞ்சுளா, ரகுமாள் ஜீனுபியா, ஜோஸ்பின் சினேகா, சாஜாதீசாபிரா, பிலோமினா ஜான்சி ஆகியோர் குழுவாக இணைந்து மலரினை வைத்து அத்தப்பூ கோலமிட்டனர்.

ஏற்பாடுகளை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளியின் முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News