சங்கரன்கோவில் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராஜா எம்.எல்.ஏ. ஆய்வு
- அச்சம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழையால் பல வீடுகள், சாலைகள் சேதமடைந்தன.
- மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட மேல இலந்தை குளம், மூவிருந்தாளி, அச்சம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் பல வீடுகள், சாலைகள் சேதமடைந்தன.
இந்நிலையில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து பொது மக்களுக்கு நிதி உதவி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கினார். தொடர்ந்து அரசு அதிகாரிகளிடம் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த ராஜா எம்.எல்.ஏ. அரசின் மூலம் வழங்கப் படும் உதவிகள் அனைத்தும் விரைவில் வழங்க ஏற்பாடு செய்ய படும் என தெரிவித்தார். அதற்கு பாதிக்கப்பட்ட மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
ஆய்வின் போது ஒன்றிய செயலாளர்கள் வெற்றி விஜயன், பெரியதுரை, மானூர் யூனியன் சேர்மன் ஸ்ரீலேகா அன்பழகன், அச்சம்பட்டி ஊராட்சி தலைவர் அல்லி துரை சண்முகதாய், மூவிருந்தாளி ஊராட்சி தலைவர் வெள்ள பாண்டியன், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் வீமராஜ், மாவட்ட பொறி யாளர் அணி அமைப்பாளர் பசுபதி பாண்டியன், மூவிருந்தாளி கிளை செயலாளர் ஜோசப், மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.