பாம்பன் பாலம் அருகே கடற்கரை பூங்காவில் கலெக்டர் ஆய்வு
- பாம்பன் பாலம் அருகே கடற்கரை பூங்காவில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
- வருகிற 21-ந்தேதி மீனவர்தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி கடல் உணவு அரங்கம் அமைக்கப்பட உள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சியில் பாம்பன் பாலம் அருகே உள்ள கடற்கரை பூங்காவை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
பூங்காவில் வைக்கப் பட்டுள்ள உடற்பயிற்சி உபகரணங்கள், விளை யாட்டு உபகரணங்கள், மின்விளக்குகள் வசதிகள், சுற்றுச்சுவர் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார். பின்னர் கூடுதலாக உபக ரணங்கள் அமைக்கவும், மின்விளக்குகள் அமைக்க வும், சுற்றுச்சுவரை சீர மைத்து வர்ணம் பூசி ஓவியங்கள் தீட்டி பொது மக்கள் பார்த்து ரசிக்கும் வகையில் அமைக்க வேண்டுமென அலுவ லர்களுக்கு உத்தரவிட்டார்.
வருகிற 21-ந்தேதி மீனவர்தினம் கடைபிடிக் கப்படுவதையொட்டி இங்கு மாபெரும் கடல் உணவு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு அரங்கிலும் ஒவ்வொரு வகையான கடல் உணவுகள் தயாரித்து பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.
கடல் உணவுப் பொருட் களின் சிறப்புகளை பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும், விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையிலும் கடல் உணவு திருவிழா நடத்தப்பட உள்ளது. கடல் உணவு அரங்கத்தை பார்வை யிடவும், விதவித மாக உணவுகளை சாப்பி டவும் ஏராளமானோர் வரு வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
அதற்குரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.
இந்த ஆய்வில், மாவட்ட சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) அருண்பிரசாத், ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதரன் மாணிக்கம், மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.