உள்ளூர் செய்திகள்

13 ஏழை ஜோடிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் திருமணம் நடத்தி வைத்து வாழ்த்தினார். அருகில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பழனிகுமார் உள்பட பலர் உள்ளனர்.

13 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்

Published On 2022-12-05 12:25 IST   |   Update On 2022-12-05 14:04:00 IST
  • சிவகங்கை மாவட்டத்தில் 13 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை அமைச்சர் பெரியகருப்பன் நடத்தி வைத்தார்.
  • மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி பேசினார்.

சிவகங்கை

இந்து சமய அறநிலை யத்துறையின் சார்பில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், இளையாத்தங்குடி கைலாசநாதர் சுவாமி மற்றும் நித்திய கல்யாணி அம்மன் கோவிலில், 13 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி பேசினார்.

ரூ.4.97 லட்சம் மதிப்பீட்டில் 13 ஜோடிகளுக்கு திரு மாங்கல்யம், மணமகள் மற்றும் மணமகன் ஆகியவர்களுக்கான ஆடைகள், மணமக்களுக்கு மாலை, புஷ்பம், பாத்தி ரங்கள், பித்தளை குத்து விளக்கு, பாய், தலையணை, கேஸ் அடுப்பு உள்ளிட்ட சீர்வரிசைகள் கோவில் நிர்வாகத்தினர் சார்பில் கோவில் உபயதாரர்களின் பங்களிப்புடன் வழங்கப்படது.

இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பழனிக்குமார், உதவி ஆணையர்கள் செல்வ ராஜ் (சிவகங்கை), ஞான சேகரன் (ராமநாதபுரம்) வில்வமூர்த்தி (மடப்புரம்), திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சோ.சண்முகவடிவேல், கோவில் அறங்காவலர்கள் லெட்சுமணன், சபா அருணா சலம், சம்பத், ராஜா சாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News