உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் மூலிகை தோட்டம் அமைக்க மானிய விலையில் இடுபொருட்கள்

Published On 2023-03-03 09:25 GMT   |   Update On 2023-03-03 09:25 GMT
  • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறையின் மூலம் விவசாயிகளுக்கு மூலிகை தோட்டம் அமைக்க ரூ.750 மான்ய விலையில் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது.
  • தேவைப்படும் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை நகல் -1,பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2 ஆகிய ஆவ–ணங்களை கபிலர் மலையில் உள்ள தோட்டக்கலை துறை அலுவலகத்தில் கொடுத்து பெற்று கொள்ளலாம்.

பரமத்தி வேலூர்:

கபிலர் மலையில் உள்ள தோட்டக்கலை துறை அலுவலகம் வெளி–யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறையின் மூலம் விவசாயிகளுக்கு மூலிகை தோட்டம் அமைக்க ரூ.750 மான்ய விலையில் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது.

இடுபொருட்கள் விபரம் தலா ஒரு நபருக்கு 10 வகையான மூலிகைச் செடிகள் ,செடி வளர்ப்பு பைகள்-10,

தென்னை நார்க்கட்டி-10கிலோ ,மண்புழு உரம் -4 கிலோ வழங்கப்படுகிறது.

தேவைப்படும் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை நகல் -1,பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2 ஆகிய ஆவ–ணங்களை கபிலர் மலையில் உள்ள தோட்டக்கலை துறை அலுவலகத்தில் கொடுத்து பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் தோட்டக்–கலைத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News