தஞ்சையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் பதவிக்கான மாதிரி தேர்வு-நாளை நடக்கிறது
- காவல்துறையில் காலியாக உள்ள 3552 இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலைக் சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிக்கான தேர்வு 27.11.2022 அன்று நடைபெற உள்ளது.
- இத்தேர்வானது ஓ.எம்.ஆர். சீட் கொண்டு தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தபடும் தேர்வு போன்று முழுபாடத்திட்டத்திற்கு நடைபெறுகிறது.
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் காவல்துறையில் காலியாக உள்ள 3552 இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலைக் சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிக்கான தேர்வு 27.11.2022 அன்று நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக இலவச மாதிரித்தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை )மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற உள்ளது.
இத்தேர்வானது ஓ.எம்.ஆர். சீட் கொண்டு தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தபடும் தேர்வு போன்று முழுபாடத்திட்டத்திற்கு நடைபெறுகிறது.
இத்தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். விருப்பமுள்ள தேர்வர்கள் https://forms.gie/bcVCeHCVVwfVtafe9 என்ற Google Form Link -இல் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
மேலும் தேர்வு நாளன்று தேர்வு நடைபெறும் வளாகத்தில் காலை 8 மணிமுதல் 9 மணிக்குள் தேர்விற்கு விண்ணப்பித்த நகல் அல்லது நுழைவுசீட்டு மற்றும் இரண்டு பாஸ்போர்ட்அளவு புகைப்படங்களை சமர்ப்பிக்கவேண்டும். காலை 9 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள்தேர்வு எழுத அனுமதிக்கப்ப டமாட்டார்கள்.
மாதிரித்தேர்வுகள் தொடர்பான விபரங்களை 04362-237037 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலைநாட்களில் தொடர்புகொண்டு அறிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.