வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி
- சிறப்பு பூஜைகள் நடந்து அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி விழா நடைபெற்றது.
- சிறப்பு பூஜைகளும், பட்டு சார்த்தும் நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதார ண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக விழாவையொட்டி நேற்று சந்திரசேகரரர்- மனோன்மணி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.
பின்னர், இரவு வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் சிறப்பு பூஜைகள் நடந்து அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி விழா நடைபெற்றது.
விழாவின் காலையில் நடந்த பந்தல் காட்சி மற்றும் பூஜைகளில் வரணி ஆதீன செவ்வந்திநாத பண்டார சன்னதி, ஸ்தலத்தார்கள் கயிலை மணி வேதரத்னம், கேடிலியப்பன், உபயதா ரர்கள் பி.வி.ஆர். விவேக், கள்ளிமேடு மதியழகன் குடும்பத்தினர்கள், ஆறுகாட்டுத்துறை கிராம பஞ்சாயத்தார்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.
பின்னர், சாமி கடற்கரை அருகே உள்ள நாலுகால் மண்டபத்தில் இறக்கப்பட்டு ஆறுகாட்டுத்துறை கிராமமக்கள் சார்பில் சிறப்பு பூஜைகளும், பட்டு சார்த்தும் நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடந்தது.