உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் இருந்து பெங்களூருக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு
- மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மொத்தம் 3 ஆயிரத்து 193 எந்திரங்கள் உள்ளன.
- 15 ஆண்டுகள் நிறைவடைந்த எந்திரங்கள் மீண்டும் பயன்படுத்தாமல் அவற்றை அழிக்கப்பட உள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 ஆயிரத்து 193 எந்திரங்கள் உள்ளன. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி 2008-ம் ஆண்டுக்கு பிறகு தயாரிக்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்த எந்திரங்கள் மீண்டும் பயன்படுத்தா–மல் அவற்றை அழிக்கப்பட உள்ளது.
இதற்காக இன்று நஞ்சப்பா மாநகராட்சி பள்ளியில் இருந்து மின்னணு எந்திரங்கள் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் எடுக்கப்பட்டு, கண்டெய்னர் லாரி மூலமாக பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாக வளர்ச்சி பிரிவு மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் செய்திருந்தனர்.