அரசு கேபிள் டிவி., ஆபரேட்டராக இணைய விண்ணப்பிக்கலாம்
- எச்.டி.பாக்ஸ் கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
- எச்.டி., பாக்ஸ் வருகைக்குப்பின், மாவட்டம் முழுவதும் ஏராளமானோர், அரசு கேபிள் டிவி., ஆபரேட்டராக இணைவர்
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட அரசு கேபிள் டி.வி., நிறுவன பிரிவினர் கூறியதாவது:-
அரசு கேபிள் இணைப்புகளுக்கு எஸ்.டி.,க்கு (ஸ்டேன்டர்ட் டெபனிஷன்) பதில் எச்.டி.,(ைஹ டெபனிஷன்) செட்டாப் பாக்ஸ் வழங்குவதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் எச்.டி., பாக்ஸ் கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஆபரேட்டர்கள், தாங்கள் வசூலிக்கும் சந்தாவில் இணைப்பு ஒன்றுக்கு தற்போது ரூ.82.50 மட்டும் அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு செலுத்தினால் போதும். எச்.டி., பாக்ஸ் வருகைக்குப்பின், மாவட்டம் முழுவதும் ஏராளமானோர், அரசு கேபிள் டிவி., ஆபரேட்டராக இணைவர். தற்போது முதலே பலரும் ஆபரேட்டராக இணைவதற்கான வழிமுறைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்து வருகின்றனர். கேபிள் இணைப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
அரசு கேபிள் ஆபரேட்டராக விரும்புவோர், முகவரி, சேவை வழங்க உள்ள விவரங்களுடன் ஆதார் போன்ற ஆவணங்களை இணைத்து மாவட்ட தலைமை தபால் அலுவலகத்தில் விண்ணப்பித்து போஸ்டல் லைசென்ஸ் பெறவேண்டும். தொடர்ந்துtactv.inஎன்கிற இணையதளத்தில் உரிய ஆவணங்களை இணைத்து, விண்ணப்பிக்கவேண்டும். உரிய டெபாசிட் தொகை செலுத்தவேண்டும். அதிகாரிகள் கள ஆய்வு நடத்தி அரசு கேபிள் டிவி ஆபரேட்டராக அங்கீகரித்து லைசென்ஸ் வழங்குவர் என்றனர்.