உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

மாமரங்களில் மருந்து தெளிக்கும் பணிகள் தீவிரம்

Published On 2023-02-26 03:37 GMT   |   Update On 2023-02-26 03:37 GMT
  • பூக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் விளைச்சலும் அதிகரிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
  • பூக்கள் அதிகம் இருந்தாலும் அவை உதிராமல் இருந்தால் தான் அதிக காய்களை மகசூலாக பெற முடியும்.

குடிமங்கலம்:

உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் மரப்பயிர்களுக்கு ஏற்ற தட்பவெப்ப நிலை உள்ளது. இதனால் அதிகப்படியான இடங்களில் மா விவசாயத்தில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.அதன்படி மாந்தோப்புகள் அதிகமாக உள்ளன. தற்போது மாமரங்களில் அதிக அளவில் பூக்கள் பூத்துள்ளன. ஏப்ரல் முதல் இவை காய்ப்புக்கு வரும் என்பதால் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர். அதேநேரம் பூக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் விளைச்சலும் அதிகரிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

மாங்கன்றுகள் நட்டு 4 ஆண்டுகளில் இருந்து பலன் தரும். கோடை காலங்களில் இதன் விளைச்சல் உச்சநிலையில் இருக்கும்.இப்பகுதியில் விளையும் மாங்காய்கள் அதிக தசைப்பிடிப்புடன் இனிப்புத்தன்மை நிறைந்ததாக இருப்பதால் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. பூக்கள் அதிகம் இருந்தாலும் அவை உதிராமல் இருந்தால் தான் அதிக காய்களை மகசூலாக பெற முடியும்.

குறைவான பராமரிப்பு, கூலி ஆட்கள் தேவை குறைவு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பலரும் மா விவசாயத்திற்கு மாறி கொண்டிருக்கின்றனர். விளைச்சல் அதிகரிப்புக்கு பராமரிப்புப்பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

Similar News