உண்ணாவிரத போராட்டம் நிறுத்தப்பட்டாலும் பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்- ஆம் ஆத்மி எம்.பி.
- டெல்லிக்கு சொந்தமான தண்ணீரை 28 லட்சம் மக்களுக்கு பெற்றுத்தர வேண்டும் என்பதுதான் அவரது ஒரே கோரிக்கை.
- காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நிறுத்தப்பட்டாலும் பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்.
ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
டெல்லியின் நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கடந்த 5 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
டெல்லிக்கு சொந்தமான தண்ணீரை 28 லட்சம் மக்களுக்கு பெற்றுத்தர வேண்டும் என்பதுதான் அவரது ஒரே கோரிக்கை. அரியானா அரசு 613 எம்ஜிடி தண்ணீர் தர வேண்டும் என்பது ஒப்பந்தம். தேர்தலுக்கு பிறகு, 3 வாரங்களுக்கும் மேலாக, டெல்லிக்கு 100 எம்ஜிடி தண்ணீர் குறைவாகவே கிடைத்துள்ளது.
அதிஷி அரியானா அரசு, எல்ஜி சக்சேனா, மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். ஆனால் அவர் கேட்கவில்லை.
அதிஷி 5 நாட்கள் உண்ணாவிரதத்தில் இருந்தார். இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவர்கள் உண்ணாவிரதத்தை நிறுத்தச் சொன்னார்கள். நேற்று இரவு அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. அவரது சர்க்கரை அளவு 43 ஆக இருந்தது. அவரது குறைந்த சர்க்கரை அளவு 36 ஆக இருந்தது. அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் இல்லையெனில் அவரை இழக்க நேரிடும் என்று டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.
இதனையடுத்து அதிஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இன்னும் ICU-வில் சிகிச்சை பெற்று வருகிறார். டெல்லிக்கு தண்ணீர் திறந்துவிட கோரி நாங்கள் பிரதமருக்கும் கடிதம் அனுப்பி உள்ளோம். காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நிறுத்தப்பட்டாலும் பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என்று கூறினார்.
#WATCH | Delhi: AAP MP Sanjay Singh says, "Atishi was on a hunger strike since 5 days. Her health was deteriorating. Doctors had been asking her to break the strike. Her health started worsening yesterday night... Her sugar level was 43... Her lowest sugar level was 36. Doctors… pic.twitter.com/eoBSkhkw3n
— ANI (@ANI) June 25, 2024