இந்தியா

காங்கிரஸ் கட்சி வளர்ச்சியின் எதிரி: பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கடும் தாக்கு

Published On 2022-11-09 12:52 GMT   |   Update On 2022-11-09 12:52 GMT
  • மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருப்பது அவசியம் என பிரதமர் பேச்சு
  • இரட்டை எஞ்சின் ஆற்றலை பெற்றால் தான் புதிய உயரங்களை இமாச்சல் பிரதேச மாநிலம் எட்டும்.

காங்க்ரா:

இமாச்சல் பிரதேச மாநிலம் காங்க்ரா மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இந்த மாநிலத்திற்கு துரோகம் செய்தது, வளர்ச்சியின் எதிரியாகவும் இருந்தது. காங்கிரஸ் கட்சி மாநில முன்னேற்றத்தைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டது. எனவே, மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருப்பது அவசியம்.

இமாச்சல பிரதேசத்திற்கு நிலையான மற்றும் வலுவான அரசாங்கம் தேவை. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி என்பது போல் இரட்டை எஞ்சின் ஆற்றலையும் பெற்றால் தான் சவால்களையும் முறியடித்து புதிய உயரங்களை இமாச்சல் பிரதேச மாநிலம் எட்டும். ஊழல் மற்றும் மோசடிகளுக்கு காங்கிரஸ் தான் உத்தரவாதம் அளிப்பார்கள். காங்கிரஸ் கட்சியால் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு ஒரு நிலையான ஆட்சியைக் கொடுக்க முடியாது.

இப்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. ஆனால் குறிப்பிட்ட இந்த இரண்டு மாநிலங்களும் வளர்ச்சி அடைந்ததாக எந்த செய்தியும் வரவில்லை.

பா.ஜ.க.வுக்கு, நாடு மற்றும் ராணுவ வீரர்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் மட்டுமே விரிவான முன்னேற்றம் அடைய முடியும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Tags:    

Similar News