மணிப்பூரில் 5 பள்ளத்தாக்கு மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு
- நேற்று முன்தினம் ஊரடங்கு பிறப்பித்த நிலையில், 5 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
- பிஷ்னுபூர் மாவட்டத்தில் காலை 5 மணி முதல் காலை 11 வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் ஏற்பட்டு, பின்னர் வன்முறையாக மாறியது. மே மாதம் 3-ந்தேதியில் இருந்து வன்முறை பரவத் தொடங்கியது. இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மணிப்பூரின் படிப்படியாக வன்முறை குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்தது. இதற்கிடையே பள்ளத்தாக்கில் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் இருந்து தடுப்பு நடவடிக்கையாக பிஷ்னுபுர், காக்சிங், தவுபால், இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு ஆகிய ஐந்து மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த 5 மாவட்டங்களிலும் இன்று மீண்டும் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காக்சிங், இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு ஆகிய மாவட்டங்களில் சாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. தவுபால் மாவட்டத்தில் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தளர்த்தப்பட்டுள்ளது. பிஷ்னுபூர் மாவட்டத்தில் காலை 5 மணி முதல் காலை 11 வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு தளர்வு அதிகாரியிடம் உரிய ஒப்புதல் பெறாமல், கூட்டம் அல்லது ஆர்ப்பாட்டம் அல்லது பேரணி போன்றவற்றத்தில் ஈடுபடக்கூடாது என்று அதிகாரப்பூர்வ உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.