இந்தியா
புதிய உச்சத்தை தொட்ட இந்திய குடும்பங்களின் கடன்
- இந்திய குடும்பங்களின் நிகர நிதி சேமிப்பு வெறும் 5 சதவீதம் என்கிற அளவுக்கு குறைந்துள்ளது.
- 2023-24-ம் நிதியாண்டில் குடும்பங்களின் செலவீனங்கள், முதலீடுகள் கணிசமாக பலவீனமடைந்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவின் முன்னணி நிதி நிறுவனமான மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்திய குடும்பங்களின் கடன் மதிப்புகள் கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 40 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது.
அதேசமயம் குடும்பங்களின் நிகர நிதிச் சேமிப்புகளும் குறைந்துள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிட்டால், இந்திய குடும்பங்களின் நிகர நிதி சேமிப்புகள் வெறும் 5 சதவீதம் என்கிற அளவுக்கு குறைந்துள்ளது.
2023-24-ம் நிதியாண்டில் குடும்பங்களின் செலவீனங்கள் மற்றும் முதலீடுகள் என இரண்டும் கணிசமாக பலவீனமடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.