டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது: சோனியா, ராகுல் பங்கேற்பு
- பாராளுமன்ற தேர்தலின் கடைசிக்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது.
- இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு கலந்துகொள்கிறார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ளது. மீதமுள்ள 57 தொகுதிகளுக்கு இன்று கடைசி கட்ட தேர்தல் நடக்கிறது. இதையடுத்து, வரும் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினம் முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு கலந்துகொள்கிறார்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இதில் ராகுல் காந்தி, தேஜ்ஸ்வி யாதவ் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரான மம்தா பானர்ஜி இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
#WATCH | INDIA alliance meeting underway at the residence of Congress President Congress President Mallikarjun Kharge, in Delhi.
— ANI (@ANI) June 1, 2024
(Source: Twitter handle of Congress) pic.twitter.com/wxtXmU9Ih0