கார்கில் வெற்றி தினம்: போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
- பிரதமர் மோடி இன்று காலை கார்கில் சென்றார்.
- கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியை கடந்த 1999-ம் ஆண்டு ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. இதனை நம் இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் எதிர்கொண்டு முறியடித்தனர்.
இந்த போர் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கார்கில் வெற்றி தின 25-ம் ஆண்டு ஆகும். இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.
கார்கில் போர் வெற்றியின் 25-ம் ஆண்டு கொண்டாட்டங்கள் நாடு முழுக்க களைகட்டியுள்ளன. அரசியல் தலைவர்கள், ராணுவம், காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பினரும் போரில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான கார்கில் போர் 25வது நினைவு நாளையொட்டி இன்று காலை பிரதமர் மோடி கார்கில் சென்றார்.
கார்கில் போர் நினைவிடத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார்.
#WATCH | Ladakh: Prime Minister Narendra Modi at the Kargil War Memorial in Kargil He paid tribute to the heroes of the Kargil War on the occasion of 25th #KargilVijayDiwas2024 pic.twitter.com/dHLZmDMdi0
— ANI (@ANI) July 26, 2024