இந்தியா (National)

உச்சநீதிமன்றத்தில் இன்று "லாப்டா லேடீஸ்" ஸ்பெஷல் ஷோ - ஏன் தெரியுமா?

Published On 2024-08-09 02:15 GMT   |   Update On 2024-08-09 02:17 GMT
  • உச்சநீதிமன்றத்தில் லாப்டா லேடீஸ் திரைப்படம் திரையிடப்படுகிறது.
  • லாப்டா லேடீஸ் தயாரிப்பாளர், இயக்குநர் திரையிடலில் கலந்து கொள்ள உள்ளனர்.

உச்சநீதிமன்றத்தில் இன்று லாப்டா லேடீஸ் என்ற திரைப்படம் திரையிடப்படுகிறது. இதனை தலைமை நீதிபதிகள், அவர்களது குடும்பத்தார் மற்றும் அலுவலர்கள் கண்டுகளிக்க உள்ளனர். பாலின சமத்துவம் பேசும் இந்த படம் விமர்சன ரீதியிலும், வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இந்த படத்தின் விசேஷ திரையிடலின் போது படத்தின் தயாரிப்பாளரும், பிரபல நடிகருமான அமீர் கான், இயக்குநர் கிரன் ராவ் ஆகியோரும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளயாகி உள்ளது. இந்திய உச்சநீதிமன்றத்தின் 75 ஆவது ஆண்டு விழாவை ஏற்பாடு செய்யப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த படத்தின் திரையிடலுக்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

அதன்படி ஆகஸ்ட் 9 ஆம் தேதியான இன்று உச்சநீதிமன்றத்தின் நிர்வாக கட்டிட வளாகத்தின் சி பிளாக்கில் உள்ள அரங்கில் லாப்டா லேடீஸ் திரையிடப்பட உள்ளது. இந்த திரையிடலில் தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களின் குடும்பத்தாருடன் கலந்து கொள்ள உள்ளனர். இந்த படம் இன்று மாலை 4.15 முதல் 6.20 மணி வரை திரையிடப்பட உள்ளது. 

Tags:    

Similar News