இந்தியா

இன்று புதிய உச்சத்தை எட்டிய பங்கு சந்தைகள்

Published On 2024-05-24 10:55 GMT   |   Update On 2024-05-24 10:55 GMT
  • மதியம் 75,636.50 புள்ளிகளை எட்டி வர்த்தகமானது. இதுதான் இதுவரை இல்லாத வகையில் உச்சமாகும்.
  • இந்திய பங்குசந்தை நிஃப்டி இதுவரை இல்லாத அளவிற்கு 23,026.40 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆனது.

மும்பை பங்கு சந்தை நேற்று இதுவரை இல்லாத அளவிற்கு 75,499.91 சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமானது. இறுதியில் 75,418.04 சென்செக்ஸ் புள்ளிகளுடன் வர்த்தகம் முடிவடைந்தது.

இன்று காலை 9.15 மணிக்கு மும்பை பங்கு சந்தை 75,335.45 சென்செக்ஸ் புள்ளிகளுடன் வர்த்தகம் ஆரம்பமானது. பின்னர் ஏற்றம் இறக்கமாக வர்த்தகம் இருந்து வந்தது. 75,560 புள்ளிகளை தொட்டது. பின்னர் 75.274 புள்ளிகளுக்கு இறங்கியது. மதியம் 2.30 மணியளவில் 75,636.50 புள்ளிகளை எட்டி வர்த்தகமானது. இதுதான் இதுவரை இல்லாத வகையில் உச்சமாகும். அதன்பின் படிப்படியாக குறைந்த வர்த்தகமானது.

இறுதியாக வர்த்தகம் 75,410.39 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. நேற்றோடு 7.65 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் முடிவடைந்தது. இன்று குறைந்தபட்ச வர்த்தக புள்ளி 75244.22 ஆகவும், அதிகபட்சமாக 75636.50 ஆகவும் இருந்தது.

அதேபோல், இந்திய பங்குசந்தை நிஃப்டி இதுவரை இல்லாத அளவிற்கு 23,026.40 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆனது. பின்னர் படிப்படியாக குறைந்து 22957.10 நிஃப்டி புள்ளிகளுடன் வர்த்தகம் முடிவடைந்தது.

இன்று காலை 22614.10 புள்ளிகளுடன் இந்திய பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கியது. குறைந்தபட்சமாக 22908.00 புள்ளிகளுடன் வர்த்தகமானது. அதிகபட்சமாக 23026.40 புள்ளிகளுடன் வர்த்தகமானது.

மார்ச் 31 வரையிலான நிதியாண்டில் அரசுக்கு 2.1 லட்சம் கோடி ரூபாய் பங்கு ஆதாயம் (ஈவுத்தொகை) கொடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது பட்ஜெட் எதிர்பார்ப்பை விட இரண்டு மடங்காகும். வரவிருக்கும் அரசின் வருவாய் உயர்வுக்கு இது உதவியாக இருக்கும் என பார்க்கப்படுகிறது. இதனால் பங்குச்சந்தையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பவர் ஃபினான்ஸ் கார்பரேசன், ஹெச்ஏஎல், ஆர்இசிஎல், பாரத் எலக்ட்ரானிக்ஸ், டிவிஸ் மோட்டார் கம்பெனி, அதானி டோட்டல் கியாஸ், அதானி க்ரீன் எனர்ஜி, கெய்க் (இந்தியா) ஹவெல்ஸ் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி, எல்&டி, பாரத் ஏர்டெல், பிபிசிஎல் போன்ற பங்குகள் ஏற்றத்தை கண்டன.

டோரண்ட் பார்மா, அவென்யூ சூப்பர்மார்ட்ஸ், சோமாட்டோ, அதானி போர்ட்ஸ், அம்புஜா சிமெண்ட்ஸ், பஜாஜ் ஹோல்டிங்ஸ், சோலமண்டலம் இன்வெஸ்ட், ஐஆர்எஃப்சி, டெக் மகிந்திரா போன்ற பங்குகள் சரிவை சந்தித்தன.

Tags:    

Similar News