இந்தியா

ஆஸ்திரியாவா, ஆஸ்திரேலியாவா?: கன்பியூஸ் ஆன பிரதமர் மோடி

Published On 2024-07-11 15:28 GMT   |   Update On 2024-07-11 15:28 GMT
  • ரஷியா, ஆஸ்திரியா பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்று டெல்லி திரும்பினார்.
  • 40 ஆண்டுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் ஆஸ்திரியா சென்றது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி ரஷியா மற்றும் ஆஸ்திரியா பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை டெல்லி திரும்பினார்.

ஆஸ்திரிய பயணம் தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதள செய்தியில், இந்தப் பயணம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. நமது தேசங்களுக்கு இடையிலான நட்புறவு தழைத்துள்ளது. வியன்னாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது மகிழ்ச்சி. சிறப்பாக உபசரித்த ஆஸ்திரிய அரசு, அதிபர் கார்ல் நஹமர் மற்றும் மக்களுக்கு நன்றி என பதிவிட்டிருந்தார்.

சுமார் 40 ஆண்டுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் ஆஸ்திரியா சென்றது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆஸ்திரியாவில் இந்திய சமூகத்தினர் இடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது ஆஸ்திரியா என்பதை தவறுதலாக ஆஸ்திரேலியா என உச்சரித்தார். இதைக்கேட்ட அங்கிருந்த கூட்டத்தினர், ஆஸ்திரியா என திருத்திக் கூச்சலிட்டனர்.

இதுதொடர்பான வீடியோவை இணைய தளங்களில் வைரலாக்கி வரும் இணையதள வாசிகள், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு சரியான கம்பெனி கிடைத்து விட்டது என டிரோல் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News