இந்தியா (National)

சிலர் சூப்பர்மேன், கடவுளாக விரும்புகிறார்கள்: மோடியை சாடினாரா ஆர்எஸ்எஸ் தலைவர்

Published On 2024-07-18 12:47 GMT   |   Update On 2024-07-18 12:47 GMT
  • நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி ஒருபோதும் கவலைப்படவில்லை என்றார் மோகன் பகவத்.
  • ஏனெனில் அதற்காக பலரும் இணைந்து வேலை செய்கிறார்கள் என்பதால் இது பலன்களைக் கொடுக்கும் என்றார்.

ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கும்லா மாவட்டத்தில் உள்ள பிஷூன்பூரில் விகாஸ் பாரதி என்ற தன்னார்வ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி நான் ஒருபோதும் கவலைப்படவில்லை. ஏனெனில் நாட்டின் முன்னேற்றத்துக்காக பலரும் இணைந்து வேலை செய்கிறார்கள். இந்திய மக்களில் பலர் பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்படாமல் நாட்டின் நலனுக்காக பாடுபடுகிறார்கள். இது பலன்களைக் கொடுக்கும்.

நம்மிடம் 33 கோடி கடவுள்கள் மற்றும் தெய்வங்கள் இருப்பதால் வெவ்வேறு வழிபாட்டு முறைகளைக் கொண்டுள்ளோம். நமது நாட்டில் 3,800 க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. உணவுப் பழக்கங்கள் கூட வேறுபட்டவை. வித்தியாசம் இருந்தாலும், நம் மனம் ஒன்றுதான். மற்ற நாடுகளில் இதைக் காணமுடியாது.

சமூகத்துக்குத் திரும்பக் கொடுப்பது என்பது இந்திய கலாசாரத்தில் வேரூன்றி இருக்கும் ஒன்று என்பதை முற்போக்காளர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் தற்போது நம்புகிறார்கள். இது வேதங்களில் எங்கும் எழுதப்படவில்லை. ஆனால் தலைமுறை தலைமுறையாக அது நம் இயல்பில் உள்ளது.

மேலும், மனிதர்களுக்குப் பிறகு சிலர் சூப்பர்மேன் ஆக விரும்புகிறார்கள். அதன்பின் அவர்கள் தேவதை ஆக விரும்புகிறார்கள். பின்னர் பகவானாகவும், விஸ்வரூபன் ஆகவும் விரும்புகிறார்கள் என தெரிவித்தார்.

சமீபத்தில் பிரதமர் மோடி, தான் கடவுளால் அனுப்பப்பட்டவர் என தேர்தல் பிரசாரத்தில் பேசியது சர்ச்சையான நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சித்துள்ளார் என கருதப்படுகிறது.

Tags:    

Similar News