தாயை அமர்நாத் யாத்திரைக்கு அழைத்து வந்த அமெரிக்கர்- வீடியோ
- இந்திய அரசாங்கத்தின் அற்புதமான அமைப்பு... நாங்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளோம்.
- இந்தியர்கள் எல்லோரும் மிகவும் ஆச்சரியமாகவும், இனிமையாகவும், கனிவாகவும் இருக்கிறார்கள்… என்றார்.
காஷ்மீரில் உள்ள அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். தரை மட்டத்தில் இருந்து 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த குகைக் கோவிலில் நீர்வீழ்ச்சி குறிப்பிட்ட காலத்தில் குளிரில் உறைந்து லிங்கம்போல தோற்றமளிப்பதால் இதை 'பனிலிங்கம்' என்கிறார்கள்.
இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரையை பக்தர்கள் தொடங்கியுள்ள நிலையில் அமெரிக்காவை சேர்ந்த தாய் மகனான ஹீதர் ஹாத்வே -ஹட்சன் அகியோர் பனிலிங்க தரிசனத்துக்கு வந்துள்ளனர்.
அமெரிக்க பெண்மணி ஹீதர் கூறும்போது, "இங்கே இருப்பதற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அமர்நாத்துக்கு வர வேண்டும் என்று பல வருடங்களாக கனவு கண்டேன். இது இந்திய அரசாங்கத்தின் அற்புதமான அமைப்பு... நாங்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளோம். இந்தியர்கள் எல்லோரும் மிகவும் ஆச்சரியமாகவும், இனிமையாகவும், கனிவாகவும் இருக்கிறார்கள்…" என்றார்.
அவர் பேசும் வீடியோ பிரபல செய்தி நிறுவனத்தின் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியாகி வைரலானது.
#WATCH | A mother-son duo from The US, Heather Hathway & Hudson Hathway undertake the Amarnath Yatra in J&K.
— ANI (@ANI) July 9, 2024
Heather Hathway says, "...We are so grateful to be here. I have dreamed of coming to Amarnath, for many years. This has only been possible with the Government of India's… pic.twitter.com/bzCTnFyd9a